×

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது. தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 வரை குறைந்து ஒரு சவரன் ரூ.45,800க்கு விற்கப்பட்டது. விலை குறைவால் தீபாவளி பண்டிகைக்காக நகை வாங்குவோர் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்தது. இந்தியா முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு தங்கம், வெள்ளி விற்பனையானது. தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

அதாவது, 14ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,615க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,920க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,645க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,160க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,635க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.45,080க்கும் விற்கப்பட்டது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Diwali festive ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...